கட்சி கம்பத்தை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர் புகார்!!

     -MMH 


     பொள்ளாச்சி வால்பாறை சட்டமன்ற  தொகுதிக்கு உட்பட்ட  கோட்டூர் பகுதியில்   நாம் தமிழர் கட்சி கொடியினை  ஆளும் கட்சியினர்  சிலர் இடித்து வளைத்து ஒடித்து விட்டனர் என்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து சட்டரீதியாக ஆழியார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து கொடிக்கம்பத்தை சரி செய்து மீண்டும் நாம் தமிழர் கட்சியினர் அதே இடத்தில் கொடி பறக்க விட்டனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு. 


Comments