சாலை ஓரங்களில் தேங்கிய தண்ணீரை லாரி மூலமாக மாநகராட்சி சார்பாக வெளியேற்றம்!!

 

 -MMH

     கோவை. நவம்பர்.17- கோவையில் தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில், சாலை ஓரங்களில் உள்ள பள்ளங்களில் நீர் தேங்கி நிற்கின்றன. ஆதலால் மோட்டார் சைக்கிள், கார்களில் பயணம் செய்பவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாக கூடிய சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. மாநகராட்சி கமிஷனர் குமரவேல் பாண்டியனுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து அவர் உத்தரவின் பேரில் இன்று காலை முதல் 50 -க்கு மேற்பட்ட மாநகராட்சி வேன்கள் மூலமாக சாலை ஓரங்களில் தேங்கி நிற்கக்கூடிய நீர்களை வெளியேற்ற கூடிய முயற்சியில் ஈடுபட்டன. தொடர்ந்து ரேஸ் கோர்ஸ், ஆர். எஸ் புரம், பூ மார்க்கெட் பகுதி, காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதி உட்பட முக்கியமான சாலைகளில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

-சீனி,போத்தனூர்.


Comments