சிக்கல் தீர்க்கும் வலைப்பின்னல்!! - திட்டக்குழு உறுப்பினருக்கு பயிற்சி!!

     -MMH

அவிநாசி:அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ், திட்டக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.இதில், பணியின் போது எதிர்கொள்ளும் பிரச்னைகளை எப்படி சமாளிப்பது என்பது குறித்து, ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள், பி.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை வழங்குகின்றனர். 

பிரச்னைகளை சமாளிக்கும் முறை, வலை பின்னல் விளையாட்டு மூலம், மாவட்ட முதன்மை பயிற்றுனர் சுதா, விளக்கினார்.இது குறித்து, அவர் கூறியதாவது:கிராம ஊராட்சிகளில், மக்களின் பிரச்னை, தேவையறிந்து அதற்கான திட்டமிடலை திட்டக்குழு உறுப்பினர்கள் மேற்கொள்வர். 

கிராமங்களில் நிலவும் பிரச்னைகளை அறிந்துக்கொள்ள அவர்கள் நேரடியாக செல்லும் போது, குடிநீர் பற்றாக்குறை, தெரு விளக்கு, ரோடு வசதி என, பல்வேறு பிரச்னை மற்றும் புகார்களை பொதுமக்கள் முன்வைப்பர்.

இவற்றை எப்படி சாமாளிப்பது, தீர்வு காண்பது என்பது குறித்து, திட்டக்குழு உறுப்பினர்கள் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு, இந்த வலை பின்னல் பயிற்சி உதவியாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

நாளையவரலாறு செய்திக்காக,

-ஹ.மு.முஹம்மதுஹனீப், திருப்பூர்.

Comments