மது போதையில் நடு ரோட்டில் நின்று சாலையை சீர் செய்த பெண்!!

 

-MMH 

திருப்பத்தூர் மாவட்டத்தில் மதுபோதையில் இருந்த பெண் ஒருவர், திடீரென சாலையின் நடுவே நின்று போக்குவரத்தை சீர்செய்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுப்பேட்டை சாலையில் நேற்று இரவு மதுபோதையில் கையில் காலணியோடு நின்றபடி போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதும், விரைந்து வந்த அவர்கள் அப்பெண்ணை கைது செய்ய முயன்றபோது அவர் ஆபாசமாக பேசி, அவர்களை மிரட்டியுள்ளார். இதனால் போலீசார் செய்வதறியாது நின்றனர். பின்னர் சில மணி நேர போராட்டத்திற்கு அவர் கைது செய்யப்பட்டார்.

-பாரூக் சிவகங்கை.

Comments