பொள்ளாச்சி சந்தையில் அதிகரிக்கும் வெங்காய விலை கவலையில் மக்கள்..!!

-MMH

சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை மாறி மாறி ஏறு முகம் கண்டு வருவது இல்ல தரசிகளை கவலை அடைய செய்துள்ளது. அதன் படி பொள்ளாச்சி சந்தையில்  இன்று பெரிய வெங்காயம் குறைந்த பட்சம்  கிலோ ரூபாய் 80 முதல் அதிகபட்சம் ரூபாய் 120 வரையிலும்.சின்ன வெங்காயம் குறைந்த பட்சம் கிலோ ரூபாய் 100 முதல் அதிக பட்சம் ரூபாய் 130 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் சமையலில் வெங்காயத்திற்கு பதிலாக தக்காளியை அதிகம் சேர்க்கலாம் என்றால் அதன் விலையும் சற்று அதிகமாக இருப்பதால் சமையலை செய்வதற்கே மிகவும் சிரமமாக இருக்கிறது என அனைத்து தரப்பு மக்களும் கூறுகின்றனர்.அரிசிக்கு நிகராக காய்கறிகளின் விலையையும் அரசாங்கம் குறைக்க வேண்டும் அல்லது காய்கறிகளும் நியாய விலைக்கடையில் மலிவான விலையில் வழங்கிட வேண்டும் என தமிழக அரசுக்கு பொள்ளாச்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments