சென்னை மெட்ரோ ரயிலில் திங்கள் முதல் இவர்களுக்கு முக்கியத்துவம்..!

-MMH

சென்னை மெட்ரோ ரயிலில் திங்கட்கிழமை முதல் பெட்டிகளில் பெண்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் முதல் வகுப்பு பெட்டிகள் உள்ளன. இதில் பயணம் செய்ய சாதாரண பெட்டிகளில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை விட அதிகமாக செலுத்த வேண்டும். இந்நிலையில் திங்கட்கிழமை முதல், முதல் வகுப்பு பெட்டிகளில் மகளிர் மட்டுமே பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயிலில் மகளிர் மற்றும் பயணிப்பதற்காக பிரத்தியேகமாக மாற்றப்பட்டு இருப்பதாக மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரத்தியேக மாற்றப்பட்டாலும் பெண்கள் சாதாரண கட்டணத்திலேயே பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண் பயணிகள் அதிக அளவில் பயன் அடைய செய்யும் வகையில் அதிக இருக்கைகள் ஏற்படுத்தி தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

-ஸ்டார் வெங்கட். 

Comments