அபாயம் ஏற்படுத்தும் வி.ஏ.ஓ., ஆபீஸ் கட்டடம்!!!

 

-MMH

பல்லடம்:அனுப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள விரிசலால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.பல்லடம் ஒன்றியம், அனுப்பட்டி கிராமத்தில், வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்படுகிறது. உரிய பராமரிப்பின்றி அலுவலக சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த, 2002ல் கட்டப்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகம், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பாழடைந்து காணப்படுகிறது. அலுவலக சுவரின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசல், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விபத்து அபாயம் உள்ளது.சமீபநாட்களாக, மழை பெய்து வருவதால், கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பல்வேறு பணிகளுக்காக தினசரி ஏராளமானோர் வி.ஏ.ஓ., அலுவலகம் வந்து செல்லும் நிலையில், கட்டடத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

நாளையவரலாறு செய்திக்காக, 

-ஹ.மு. முஹம்மது ஹனீப் திருப்பூர்.

Comments