ஆனைமலையில் நடவு செய்யப்படும் மரக்கன்றுகள்!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை தென்சங்கம்பாளையதில் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை வாய்ப்பு பயனாளர்கள் மூலம் கிராமங்கள் தோறும் சுமார் 5 ஆயிரம் மரங்கன்றுகளை நடவு செய்து அவற்றை வளர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இது குறித்து தென் சங்கம் பாளையத்தின் ஊராட்சி தலைவர் திரு.அண்ணாதுரை கூறுகையில் தென் சங்கம் பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்ய தமிழக அரசு நிதி உதவி வழங்கி உள்ளது.

அதனை தொடர்ந்து தென் சங்கம் பாளையத்தின் ஊராட்சிக்கு உட்பட அனைத்து கிராமங்களிலும் 1.கொய்யா 

2.நாவல் பழம் 

3.மா செடி

4.பலா மரம் 

5.சப்போட்டா

போன்ற மரங்கள் நடவு செய்யப்பட்டு அவற்றை பாதுகாக்கும் பணியும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது என தகவல் தெரிவித்தார்.

அழிவின் விளிம்பில் இருக்கும் இயற்கையை பாதுகாக்கும் வகையில் மரங்களை நடவு செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments