உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹெளதியா கல்லூரியில் மரம் நடும் விழா!!

     -MMH

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் தேசிய மாணவர் படையினர் கல்லூரி வளாகத்தில் மரங்களை நட்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முகமது மீரான் தலைமை வகித்தார்.

 கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி அப்துல் காதர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தார்.

நிகழ்ச்சியின்போது ,திண்டுக்கல் 14 தமிழ்நாடு பட்டாளியன்  கீழ் செயல்படும் உத்தமபாளையம் கல்லூரி தேசிய மாணவர் படை இயக்கத்தின் முதலாமாண்டு மாணவர்களுக்கு கர்னல் சண்டிப் மேனன் சீருடை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தா். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக்,தேனி.

Comments