இறுதிப்போட்டியில் காலன் வென்றான்! ரசிகர்கள் கதறல்!

-MMH

அர்ஜென்டினா நாட்டின் பிரபல கால்பந்தாட்ட  வீரர் கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு வயது 60. 

உலகிலேயே மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று கொண்டாடப்பட்ட மரடோனா 4 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். 1986ஆம் ஆண்டு இவர் தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி உலகக் கோப்பையை வென்று அசத்தியது. இந்நிலையில் இவருடைய மரணம் விளையாட்டு அரங்கை அதிர வைத்துள்ளது.

-Ln.இந்திராதேவி முருகேசன், சோலை.

Comments