வால்பாறை நகராட்சி ஆணையர் கூழாங்கல் ஆற்றை ஆய்வு...!

 

-MMH

பொள்ளாச்சி அடுத்த வால்பாறை கூழாங்கல் ஆறு சுற்றுலா பயணிகளை கவரும்  இடமாகும்.சுற்றுலா வரும் பயணிகள் இப்பகுதியில் குளிப்பதை  வழக்கமாக வைத்துள்ளனர் அதே சமயம் ஆபத்தை உணராமல்  குளிக்கும் பொழுது இப்பகுதியில் உள்ள சூழலில் சிக்கி சுற்றுலாப்பயணிகள் நாளுக்கு நாள் இறப்பது சமீபகாலமாக  அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இது குறித்து வால்பாறை நகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.பின்பு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார் அதன்படி ஆற்றின் ஆபத்தான பள்ளத்தை நிரப்ப டிப்பர் லாரிகளில் கருங்கற்களை கொண்டு வந்து அப்பகுதியில்  கொட்டி வருகின்றனர்.விரைவாக நடவடிக்கை எடுத்த வால்பாறை நகராட்சி ஆணையர் பௌன்ராஜ் அவர்களை சுற்றுலா பயணிகளும் வால்பாறை பொதுமக்களும்   பாராட்டி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சுரேஷ்குமார் கோவை தெற்கு.

Comments