பிரதான குழாயில் உடைப்பு!! - ஆறுபோல் பெருக்கெடுத்த குடிநீர்!!

     -MMH

திருப்பூர்:நான்காவது குடிநீர் திட்ட பணியின் போது, மூன்றாவது திட்ட குழாய் உடைந்ததால், தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.திருப்பூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நான்காவது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து அவிநாசி வழியாக, திருப்பூருக்கு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

அவிநாசியில் இருந்து, மங்கலம் ரோடு, காலேஜ்ரோடு வழியாக, 15 அடி ஆழத்திற்கு குழி தோண்டி, பெரிய குழாய்கள் பதிக்கப்படுகின்றன. நேற்று மதியம், சிமென்ட் குழாய் பதிக்க குழி தோண்டிய போது, மூன்றாவது திட்ட குடிநீர் குழாய் உடைந்தது.சிறுபூலுவப்பட்டி பிரிவு அருகே, குழாய் உடைப்பு ஏற்பட்டதில், 15 அடி ஆழத்தில், 400 அடி நீளத்துக்கு தோண்டியிருந்த குழி வேகமாக நிரம்பியது. 

குழியில் தண்ணீர் நிரம்பி, ரோட்டில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்ததால், மூன்றாவது திட்ட குழாய்களில் தண்ணீர் எடுப்பது நிறுத்தப்பட்டது. உடைந்த குழாய் சீரமைக்கும் பணி, விரைவாக நடந்தது.

நாளையவரலாறு செய்திக்காக,

ஹ.மு. முஹம்மதுஹனீப்,திருப்பூர்.

Comments