முட்டையை விரும்பி சாப்பிடுபவரா..! கண்டிப்பாக இதை பாருங்கள்!!

-MMH

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முட்டையை விரும்பி சாப்பிடுவர். முட்டையில் பல ஊட்டசத்து நன்மைகள் நிறைந்துள்ளது. இருப்பினும் முட்டையை சமைக்கும் போது சிலர் செய்யும் சிறு தவறுகள் கூட அதனுடைய சக்தி வாய்ந்த நன்மைகளை முழுமையாக பெற முடியாமல் குறைத்து விடும்.

அந்தவகையில் முட்டை தொடர்பாக செய்யும் 5 தவறுகளையும் , அதை எப்படி தவிர்க்கலாம் என்பதை பற்றியும் பார்ப்போம்:

முட்டைக்கரு ஆரோக்கியமற்ற கொழுப்புச்சத்தால் நிறைந்தது என்ற தவறான கருத்துப் பரவலால் நிறைய மக்கள் அதை உண்ணாமல் தவிர்த்து விடுகின்றனர். முட்டைக்கருவில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே முட்டைக்கருவை சாப்பிட வேண்டும். ஆனால் அதனை தவிர்த்தால் நுண்ணூட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்காமல் போய்விடும்.

முட்டையை சிலர் வெண்ணெயில் தாளித்த முட்டை பொரியலை விரும்புவார்கள். வேறு சிலர் எளிமையாக தயாரிக்கப்பட்ட வேக வைத்த முட்டையை சாப்பிட விரும்புவார்கள். முட்டையை எண்ணெயில் சமைக்கப் போகிறோம் என்பதும் முக்கியம். கொழுப்பும் மற்றும் நிறைவுற்ற கொழுப்பும் மாரடைப்பு ஏற்பட மற்றும் கொழுப்புச்சத்தை அதிகரிக்க வழிவகுத்துவிடும்.எனவே ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான மாற்றுகளை தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும்.

காய்கறிகளை முட்டையுடன் சேர்த்து சாப்பிடலாம். இது காய்கறிகளை அதிகமாக உட்கொள்ள வழிவகுக்கும். மேலும் இப்படி உண்ணும் போது நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகளை நாம் பெற முடியும். கீரை , தக்காளி , குடை மிளகாய் மற்றும் காளான் போன்ற காய்கறிகளையும் கூட முட்டையுடன் சேர்த்து சாப்பிடலாம். இது உங்களுக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்க உதவும்.

முட்டையை குறிப்பிட்ட கால அளவு தாண்டியும் அதிக நேரத்திற்கு சமைப்பது. அதனை நெடு நேரம் அதிக வெப்ப நிலையில் வைத்து சமைக்கும் போது முட்டையிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடும் . அது போக முட்டையை அதிக வெப்ப நிலையில் வைத்து சமைக்கும் போது முட்டையிலுள்ள கொழுப்பு ஆக்ஸிஜினேற்றம் அடைந்து ஆக்ஸிஸ்டிரால்ஸ் என்னும் காம்பவுண்டை உற்பத்தி செய்கிறது. இந்த ஆக்ஸிஸ்டிரால்ஸ் நமது இதய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாகும்.

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் முட்டையை எப்படி சமைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.மேலும் எந்த முறையில் உணவை தயாரித்தால் குறைந்த கலோரிகள் கொண்ட உணவு கிடைக்குமோ அந்த முறையை பின்பற்றினால் சீக்கிரம் எடை குறையும்.  

-ஸ்டார் வெங்கட்.

Comments