தஞ்சை மாவட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு!!

 


     தஞ்சை மாவட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு தஞ்சை மாவட்ட வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் திரு 'கோவிந்தராவ்'  அவர்களால் வெளியிடப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் 206215 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 980016 பேரும், பெண்கள் 1026069 பேரும், இதர பாலினத்தவர் 130 பேரும் உள்ளனர். ஆண்களை விட பெண்கள் 46 ஆயிரத்து 53 பேர் அதிகமாக உள்ளனர்.

சட்டமன்ற தொகுதி வாாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

திருவிடைமருதூர் சட்டசபை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,50,630, ஆண்கள்- 1,24,820, பெண்கள்- 1,25,803, 3-ம் பாலினத்தவர்-7. கும்பகோணம் சட்டசபை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் - 2,64,324, ஆண்கள்- 1,29,579, பெண்கள்- 1,34,735, 3-ம் பாலினத்தவர் -10. பாபநாசம் சட்டசபை தொகுதியில் மொத்த வாக்காளர்கள்- 2,54,725, ஆண்கள்- 1,25,166, பெண்கள்- 1,29,543, 3-ம் பாலினத்தவர்-16.

திருவையாறு சட்டசபை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் - 2,62,616, ஆண்கள்- 1,28,449, பெண்கள் 1,34,158, 3-ம் பாலினத்தவர்-9. தஞ்சை சட்டசபை தொகுதியில் மொத்த வாக்காளர்கள்- 2,81,515, ஆண்கள்- 1,34,898, பெண்கள்- 1,46,565, 3-ம் பாலினத்தவர்-53. ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் மொத்த வாக்காளர்கள்- 2,36,176, ஆண்கள்- 1,15,328, பெண்கள்- 1,20,845, 3-ம் பாலினத்தவர் 3 பேர்.

பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,40,203, ஆண்கள்- 1,15,412, பெண்கள் -1,24,769. 3-ம் பாலினத்தவர் -22 பேர். பேராவூரணி சட்டசபை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் -2,16,026, ஆண்கள்-1,06,364, பெண்கள் 1,09,652, 3-ம் பாலினத்தவர் -10 பேர்.

பெயர் சேர்க்கலாம்

வரைவு வாக்காளர் பட்டியலின் நகல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ௮னைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்காக டிசம்பர் 15-ந்தேதி வரை வைக்கப்படும். தஞ்சை மாவட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

1-1-2003-ந்தேதிக்கு முன்னர் பிறந்த தகுதியுடைய மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் எண்-6ஐ அந்தந்த வாக்குச்சாவடிகளில் கேட்டுப்பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்திற்கான ஆதார் ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தினை படிவத்தில் ஒட்டி அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கலாம்.

வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர், முகவரி இவற்றில் ஏதேனும் பிழை இருப்பின், படிவம் எண் 8 பூர்த்தி செய்து வழங்கலாம். இறந்த மற்றும் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் படிவம் எண் 7 மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் குடிபெயர்ந்த வாக்காளர்கள் படிவம் எண் 8 ஏ பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்

தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு சிறப்பு முகாம்கள் வருகிற 21, 22 ஆகிய தேதிகளிலும், அடுத்த மாதம் 12, 13 ஆகிய தேதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மேற்குறிப்பிட்ட நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

-ராஜசேகர்,தஞ்சை.

Comments