அவிநாசியில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி!!!

 

-MMH

திருப்பூர்:அவிநாசி சுற்றுப்பகுதியில் நேற்று முன்தினம், 80 மி.மீ., அளவுக்கு கனமழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தென்மேற்கு பருவமழை மூன்று மடங்கு அதிகம் பெய்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதால், மானாவாரி விவசாய பணிகள் முன்கூட்டியே துவங்கியது.வடகிழக்கு பருவத்தில், அக்., மாதம் சராசரி அளவுக்கு மட்டும் மழை பெய்தது; இம்மாதம் மழை குறைவாக இருந்தது. கடந்த மூன்று நாட்களாக, மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக, அவிநாசியில், 80 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. திருப்பூர் தெற்கு -67 மி.மீ., - திருப்பூர் வடக்கு -60 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது. வெள்ளகோவிலில், 30.20, மடத்துக்குளத்தில், 29, பல்லடம், ஊத்துக்குளியில், தலா, 27, உடுமலை -25, தாராபுரத்தில், 20 மி.மீ., என, மாவட்டத்தில் சராசரியாக, 27.44 மி.மீ., மழை பெய்துள்ளது.சில நாட்களாக, கனமழை பெய்து வருவதால், மானாவாரி பயிர் சாகுபடியில், தானிய மகசூல் கூடுதலாக கிடைக்குமென, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாளையவரலாற யெ்திக்காக. 

-ஹ.மு.முஹம்மதுஹனீப் திருப்பூர்.

Comments