தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி!!!

 

-MMH

வால்பாறை:அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், கற்போம் எழுதுவோம் மையத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நடந்தது.வால்பாறையில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் சார்பில், கற்போம் எழுதுவோம் மையத்தில் பணிபுரியவிருக்கும் தன்னார்வலர்களுக்கு, இரண்டு நாள் பயற்சி வால்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்தது.

எஸ்.எஸ்.ஏ., பொறுப்பாளர் பிரதீபா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர் காளிமுத்து பயிற்சியை துவக்கி வைத்தார்.பயிற்சியில் மொத்தம், 40 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியை, ஆசிரியர் பயிற்றுனர்கள் சக்திவடிவேல்குமார், சங்கீதா, ஆசிரியர்கள் அருணா, ராஜேந்திரன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

நாளையவரலாறு செய்திக்காக, 

-முஹம்மது ஹனீப் திருப்பூர்.

Comments