பணம் வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடினால் சிறை!! காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை...!
பணம் வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடினால் சிறை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு:
தஞ்சை மாவட்ட போலீஸ் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர், காசு வைத்து ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாடுபவர்களை எச்சரித்துள்ளார், தமிழ்நாடு அரசு ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்துள்ள நிலையில் அதை விளையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது போன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை நடத்தும் நிறுவனங்கள் கணினி மற்றும் இதர சாதனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார், அதை மீறி விளையாடுபவர்கள் மீது கடுமையான சட்டம் பாயும் என்றும் சிறைத்தண்டனை உள்ளிட்ட தண்டனைக்கு ஆளாவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ராஜசேகரன் தஞ்சாவூர்.
Comments