சகதியில் மாட்டிக்கொண்டு தத்தளிக்கும் வாகனங்கள்!!
. ரோடு இல்லாமல் தவிக்கும் வாகனம்
கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுறத்திலிருந்து செல்லும் வழியில் பாலத்திற்கு அருகில் ரோடு இல்லாமல் வாகன ஓட்டிகள் தத்தளிக்கின்றனர்.
நஞ்சுண்டா புறத்திலிருந்து எல்ஜி நகர் வழியாக வெள்ளலூர் அடையும் அந்தச் சாலை, மழைக்காலமாக இருப்பதால் சேறும் சகதியுமாக வாகன ஓட்டிகள் அனைவரும் கீழே விழுந்து எழுந்து செல்கிறார்கள். வாகனங்கள் அடிக்கடி சிக்கிக் கொண்டு இருப்பதாலும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாகவும் அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.
உடனடியாக அந்த சாலையை சரி செய்யவேண்டும் என்றும் வரவிருக்கும் விபத்துகளை தடுக்க வேண்டுமென்றும் மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஈஷா,கோவை.
-
Comments