பொள்ளாச்சி கோவை ரோடு சிக்னல் அருகில் திமுக வினர் பேருந்து முற்றுகை..!!

 

 -MMH

     திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 2021 சட்டமன்ற தேர்தல் சுற்று பயணமாக இன்று திருக்குவலையில் தனது பிரசாரத்தை தொடங்கினர்.

நாகை மாவட்டம் திருக்குவளையில் அனுமதி இன்றி பொது கூட்டம் நடத்தியது. 50 பேருக்கு மேல் கலந்து கொண்டது, அரசின் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமை ஆகிய விதி மீறல்களுக்காக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி மற்றும் திமுகவினர் 50 இக்கு மேற்பட்டோர் தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

இதனை கண்டித்து  பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக வினர் பொள்ளாச்சி கோவை ரோடு சிக்னல் அருகில் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். பேருந்துகள் முற்றுகை இடப்பட்டது.

மாநில விவசாய அணி துணை தலைவர் இரா.தமிழ்மணி, மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், நகர பொறுப்பாளர் டாக்டர்.வரதராஜன் திமுக வினர் முற்றுகை இட்டனர். காவல் துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். பிரதான சாலை ஆன கோவை , திருப்பூர் செல்லும் சாலை நடுவில் அமர்ந்து சாலை மறியல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V. ஹரிகிருஷ்ணன்,

பொள்ளாச்சி கிழக்கு.

Comments