பல்லடம் வங்கி கொள்ளை வழக்கு!! - முக்கிய குற்றவாளி கோர்ட்டில் ஆஜர்!!!

     -MMH

பல்லடம்:திருப்பூர் மாவட்டம், பல்லடம் வே.கள்ளிப்பாளையம், பாரத ஸ்டேட் வங்கி கிளையில், பிப். 24ல், லாக்கர்களை உடைத்து, 600 சவரன் நகை மற்றும், 18.50 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.அதில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அனில்குமார், 38, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இஷார்கான், 34, ராமகிருஷ்ண ஆச்சாரி 32, ராமன்ஜி அப்பா 35, ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.கொள்ளை வழக்கில், முக்கிய குற்றவாளியான கஜராஜ் சிங் என்பவரை தேடி தனிப்படை போலீசார், ராஜஸ்தான் சென்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக, தேடுதல் வேட்டையில் தொய்வு ஏற்பட்டதை தொடர்ந்து பல்லடம் திரும்பினர்.தற்போது, கஜராஜ் சிங்கை, 15 நாட்களுக்கு முன், திருட்டு வழக்கில் ஹரியானா போலீசார் கைது செய்தனர். இதையறிந்த தனிப்படை போலீசாரின் விண்ணப்பத்தின் பேரில், கஜராஜ் சிங், காமநாயக்கன்பாளையம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பல்லடம் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

நாளையவரலாறு செய்திக்காக, 

-முஹம்மது ஹனீப்,திருப்பூர்.

Comments