நிவர் புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் புதிய தகவல்..!

 

-MMH

 நிவர் புயலானது எங்கு கரையை கடக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.அதாவது இன்று காலை அவர் வெளியிட்ட பதிவில்  நிவர் புயலானது தமிழகத்திற்கானது. அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது எங்கே கடக்க போகிறது என தெரியவில்லை.

நேற்று நான் கூறியது போல் சென்னை- காரைக்கால் இடையே கரையை கடக்கிறதா இல்லை வேதாரண்யம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறதா என தெரியவில்லை. இவை இரண்டுமே இல்லாவிட்டால் வலுவான புயலாகவோ அல்லது மிதமான புயலாகவே மாற வாய்ப்புண்டு.

வலுவான புயலாக மாறினால் காற்றின் வேகம் மணிக்கு 130- 140 கி.மீ. வேகத்திலும் மிதமான புயலாக இருந்தால் மணிக்கு 80 முதல் 100 கி.மீ. வேகத்திலும் இருக்கலாம். குறைந்தபட்சம் இன்று இரவோ அல்லது நாளை காலையோ புயல் எங்கே கரையை கடக்கும் என்பது குறித்த தெளிவு நமக்கு கிடைக்கும்.

இயற்கை விஷயத்தில் எப்போதுமே ஒரு திருப்பம் (ட்விஸ்ட்) இருக்கும் என்பதை மறக்க வேண்டாம் மக்களே!. கரையை கடக்கும் இடங்கள் இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்பது ஒவ்வொரு முறையும் ஊசலாடிக் கொண்டே இருக்கும் என்றார் பிரதீப் ஜான்.

இந்த நிலையில் புயல் எங்கே கரையை கடக்கும் என்பது குறித்த ட்விஸ்ட் தற்போது குறைந்துள்ளது என கூறி ஒரு புதிய தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் இதே வேகத்தில் நிவர் புயல் நகர்ந்தால் காரைக்கால்- கடலூர் இடையே கரையை கடக்கும்.

ஆனால் புயலின் வேகத்தில் தாமதமானால் அல்லது குறைந்தால் புதுவை- சென்னை இடையே கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இன்று காலை வரை புயல் கரையை கடக்கும் இடம் குறித்து அரிவது கடினம் என அவர் சொல்லிய நிலையில் தற்போது புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

-ராஜசேகரன் தஞ்சை.

Comments