தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல்!! - ஆனைமலை தாசில்தார் கடும் எச்சரிக்கை!!

 

     -MMH

பொள்ளாச்சி ஆனைமலை,கோட்டூர்  சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனைத் தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.இந்த நிலையில்  ஆனைமலை தாசில்தார் வெங்கடாசலம் கூறுகையில் ரேஷன் அரிசியை மக்களிடம் விலைக்கு வாங்கி இருப்பு வைப்போர்,கேரளாவுக்கு கடத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,கடத்தலுக்கு பயன்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு கடத்தும் நபர்கள்  குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.

மேலும் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ள இரண்டு தொலைபேசி எண்களை பகிர்ந்துள்ளார்.

தொலைபேசி என்: 9442145332,9789230138.

-M.சுரேஷ் குமார்,கோவை தெற்கு.

Comments