கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் கொண்டாட்டம்!!

 

-MMH

தமிழகம் முழுவதும் தீபமேற்றி திருவிழா கொண்டாட்டம்:

ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் வரும் நன்னாளில் வரும்  திருக்கார்த்திகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடம் கார்த்திகை நட்சத்திரம் பௌர்ணமி நாளான நேற்று அமைந்து வந்தது. கார்த்திகை தீப திருநாள்  மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.. கார்த்திகை மாதம் என்றாலே விளக்கிடும் மாதம் என்ற பெயர் உண்டு. விளக்கு ஏற்றி இறைவனை வழிபடக் கூடிய மாதம். இந்த மாதத்தின் மிக முக்கிய நாளாக கார்த்திகை மகா தீப திருநாள் விளங்குகின்றது. நவம்பர் 29 ஆம் தேதியான நேற்று  இந்த மகா தீபம் திருவண்ணாமலையில்  ஏற்றப்பட்டது . நேற்றைய தினம் நம் வீடுகளிலும் விளக்கு ஏற்றி வழிபட, ஜோதி வடிவில் விளங்கும் ஈசன் நம்  வீட்டில் குடி கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது .அதனால் தமிழகம் முழுவதும் பெண்கள் வீடு தோறும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். 

பஞ்சபூத சிவாலயங்களில் அக்னி தலமாக திகழ்கிறது திருவண்ணாமலை திருக்கோயில்.

திருவாரூரில் ஒருவர் பிறந்தாலே முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என முன்னோர்கள் கூறுவதுண்டு. திருமணம் ஆன பின்னர் பலரும் உங்கள் வீட்டில் மதுரையா?, சிதம்பரமா? என்ற கேள்வி கேட்பதுண்டு.

மதுரையை மீனாட்சி அம்மன் ஆண்டு வருவதால், மனைவியின் அதிகாரம் மேலோங்கி இருக்கும் என்றும், சிதம்பரம் என்றால் நடராஜரின் அருளாட்சி நடக்கிறது என்பதன் அடிப்படையில் கேள்வி கேட்கப்படும்.

ஆனால் திருவண்ணாமலையில் சிவனின் உடம்பில் சரிபாதி பார்வதி பெற்ற சிறப்பு வாய்ந்த தலம். அர்த்தநாரீஸ்வரராய்  சிவன் விற்றிருக்கிறார். இனிமேல் யார் கேட்டாலும் எங்கள் வீடு திருவண்ணாமலை போன்றது என சொல்லுங்கள் என்பது பெரியவர்கள் கூற்று. 

இது போன்று பல பெருமைகள் பெற்ற திருத்தலமான திருவண்ணாமலை கோவில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீப பெருவிழா நேற்று மிக விசேஷமாகக் கொண்டாடப்பட்டது. நேற்று மாலை சுமார் 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அர்த்தநாரீஸ்வரர் ஆனந்தமாய் அருள்பாலித்தது  கண் கொள்ளா காட்சியாக இருந்தது .

நாளைய வரலாறு செய்திக்காக,

-இராஜசேகரன். தஞ்சாவூர்.

Comments