கம்பம் அருகே சண்முகா நதி அணை நிரம்பியது!!

 

-MMH

வடகிழக்கு பருவ மழை காரணமாக, நீர்பிடிப்பு பகுதியான பச்சக்கூமாச்சி மலைப்பகுதிகளில் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால், சண்முகா நதி அணை அதன் கொள்ளளவை எட்டியது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சண்முகா நதி அணையின் நீர்பிடிப்பு பகுதியான பச்சக்கூமாச்சி மலைப்பகுதியில் வடகிழக்கு பருவமழை காரணமாக விடிய விடிய மழை பெய்தது. இதனால் புதன்கிழமை அணையின் நீர்மட்டம் 45.90 அடி உயரமாக இருந்தது, வியாழக்கிழமை,52.30 அடி உயரத்தை எட்டியது. அணையின் மொத்த உயரம் 52.55 அடியாகும். புதன்கிழமை, 8 அடி உயரத்தை எட்டிய நிலையில் வியாழக்கிழமை, 6.40 அடி உயரமாகி அதன் முழு கொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.

அணை நிலவரம்: நீர்மட்டம் 52.30 அடியாகவும், நீர் இருப்பு 78.60 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு, 242 கன அடியாகவும்  இருந்தது, அணையிலிருந்து நீர் வெளியேற்றம் இல்லை.சண்முகா நதி அணை முழு கொள்ளளவை வியாழக்கிழமை எட்டி, மறுகால் பாய்ந்து வருகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக் தேனி.

Comments