தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா..!

-MMH

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நாளையுடன் முடியும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஒரு மருத்துவர், நர்ஸ், உதவியாளர் கொண்ட 2 ஆயிரம் மினி கிளினிக் செயல்படும். இந்த மினி கிளினிக் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று முதல்வர் எடப்படி பழனிசாமி கூறினார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது அறிவித்துள்ள ஊரடங்கு நாளையுடன் (30ம் தேதி) முடிவடைகிறது. இதையடுத்து டிசம்பர் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்துள்ளது.      

-ஸ்டார் வெங்கட்.

Comments