நெற்குப்பையில் நடைபெற்ற கபடிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருப்பத்தூர் எம்.எல்.ஏ பரிசுக் கோப்பையை வழங்கினார்!!

 

-MMH

நெற்குப்பையில் நடைபெற்ற கபடிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருப்பத்தூர் எம்.எல்.ஏ பரிசுக் கோப்பையை  வழங்கினார்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் நெற்குப்பையில் உள்ள மண்டுகருப்பர் கோவில் தெருவில், தந்தை பெரியார் 142 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தந்தை பெரியார் அணியினரால் நடத்தபட்ட 9ஆம் ஆண்டு மாபெரும் வெற்றிக் கோப்பைக்கான,


 கபாடிப் போட்டியின் இறுதிப் போட்டியில் சிவகங்கை மாவட்ட திமுகழகச் செயலாளரும், திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ  கலந்து கொண்டு இரு அணியினரையும் ஊக்கப்படுத்தினார். வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகையையும்

கோப்பைகளையும் வழங்கினார்.

முதல் பரிசை தூத்துக்குடி அணியினரும்,

இரண்டாம் பரிசை ஈரோடு அணியினரும்,

மூன்றாம் பரிசை மணப்பாறை அணியினரும்,

நான்காம் பரிசை மலம்பட்டி அணியினரும் கைப்பற்றினர்.

-பாரூக் சிவகங்கை.

Comments