முன்னேற்பாடுகளுடன் அணைத்து கடைகளும் செயல்படவேண்டும்!! - தொழிலாளர் சங்கம் அறிவிப்பு!!

     -MMH

 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  தாலுகாவில் உள்ள அனைத்து தொழிலாளர் சங்கங்கள் இணைந்து கருத்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் அனைத்து தொழிலாளர் சங்கம் தலைவர் பிரதிநிதி மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.செயலாளர் சத்யநாராயணன் துணை நிர்வாகி வேதம் முரள, மற்றும் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் இந்த கூட்டத்தில் விதிமுறைகள் கட்டுப்பாட்டிலிருந்து தவிர்க்கப்பட்டு தொழில் வாய்ப்புக்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் நோய் தொற்று பரவும் அபாயம் இன்றளவும் நீடித்து வருவதால், கடைகள் வணிக வளாகங்கள்,ஜவுளிக்கடைகள்,ஹோட்டல்கள் மற்றும் அனைத்து லாட்ஜ் போன்ற மக்கள் கூடும் இடங்களில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க  முன்னேற்பாடுகளுடன் கடைகள் அனைத்தும் செயல்படவேண்டும்.

அவ்வாறு செயல்படாத கடைகள் அதனை சார்ந்த இடங்கள் அனைத்திலும் சங்கத்தின் சார்பாக அபராதங்கள் விதிக்கப்படும்.இன்று இந்த கலந்தாய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

-வினோத் குமார்,கும்பகோணம்.

Comments