கல்குவாரியில் புகுந்து கத்தியை காட்டி மாமூல் கேட்ட பாமக நிர்வாகிகள் கைது..!

 

-MMH

மதுரை வாடிப்பட்டியில் தனியார் கல்குவாரியில் புகுந்து கத்தியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டிய பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனியார் கல்குவாரியில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளரான நவீன் குமார், கார்த்தி, சீனி, சசி உள்ளிட்ட நான்கு பேரும் புகுந்து கத்தியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்பு லாரி ஒட்டுநரைத் தாக்கி ரூ.7500ஐ பறித்துச் செல்ல முயன்றதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாடிப்பட்டி போலீசார், மாமூல் கேட்டு மிரட்டிய பாமக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நான்கு பேரையும் அதிரடியாக கைது செய்து, பாமக மாவட்ட நிர்வாகி உள்பட அனைவரையும் சிறையில் அடைத்தனர். ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.

-பாரூக் சிவகங்கை.

Comments