சீனாவுக்கு செக்!! ட்ரம்பின் பிளான்...!

 -MMH

அமெரிக்க அதிபர் பதவிக்காலம் முடியவிருக்கும் ட்ரம்ப் இருக்கும் கொஞ்ச நாட்களில் சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு சீன ராணுவத்தோடு நெருக்கமாக இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வதை ட்ரம்ப் நிறுத்தினார். இருக்கும் கொஞ்ச நாட்களில் சீனா மீது பொருளாதார ரீதியில் ட்ரம்ப் கட்டுப்பாடுகள் விதிப்பார் என கூறப்படுகிறது.

அதே போல் தென் சீன கடல் எல்லை பிரச்னையில் ட்ரம்ப் முக்கிய முடிவு எடுப்பார் என கூறப்படுகிறது. சீனாவின் மீன்பிடி திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன அதிகாரிகளுக்கு விசா தடை விதிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது எதிர்காலத்தில் பைடன் மாற்ற முடியாத அளவுக்கு தற்போது ட்ரம்ப் மாற்றங்களை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் ட்ரம்பின் இந்த மாற்றம் அமெரிக்கர்களுக்கே பிடிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதனால் ஜனவரிக்குள் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-ஸ்டார் வெங்கட். 

Comments