அகற்றப்படாத சாக்கடை கழிவு! - வியாபாரிகள் அவதி..!!

  -MMH

     கோவை மாவட்டம் போத்தனூர் குறிச்சி காந்திஜி ரோடு பகுதியில் மலைபோல் குவிந்திருக்கும் சாக்கடை கழிவுகளால் வியாபாரிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

அங்குள்ள சாக்கடை கழிவுகளை ரோட்டோரத்தில் குவித்து வைத்திருக்கும் மாநகராட்சி உடனடியாக அந்த சாக்கடை கழிவுகளை அகற்றுமாறு பொதுமக்களும் வியாபாரிகளும் கேட்டுக்கொள்கிறார்கள்.

மாலை நேரங்களில் கொசுவும் துர்நாற்றமும் வீசுவதால் நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும், இதை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அந்த கழிவுகளை அகற்றுமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஈஷா,கோவை.

Comments