அஷ்டமி நாளான இன்று காலபைரவர் சிறப்பு பூஜைகள்..!!

 

  -MMH

அஷ்டமி நாளான இன்று காலபைரவர் சிறப்பு பூஜைகள்..!!

கலியுகத்துக்கு கடவுளே நம் காலபைரவர் என்கிறது இந்து சாஸ்திரம். இந்தக் கலியுகத்தில் நாம் நிம்மதியுடன் வாழவும் நம்  மனதில் இருக்கும் பயத்தையும், மனக்குழப்பத்தையும் தவுடுபிடி ஆக்கும் வல்லமை நம் கால பைரவருக்கு உண்டு என்று சொன்னால் அது மிகை ஆகாது. 

அதன்படி அஷ்டமி திருநாளான இன்று பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் காலபைரவரை மனதார வணக்கி வருகின்றனர்.  அஷ்டமியில் காலபைரவருக்கு வடை மாலை சார்த்தி, சந்தன காப்பிட்டு வழிபட்டால், நம் கவலைகளையெல்லாம் தீரும் என்பதாலும் சிவனே காலபைரவராய் அவதரித்தார் என்பதாலும் பொள்ளாச்சியில் உள்ள அனைத்து கோவில்களிலும்  சிவன் மற்றும் காலபைரவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும் செய்யப்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments