சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு காவலர்களுக்கு நற்சான்று!!

     -MMH 


    சிங்கம்புணரி: நவ - 6
    புழுதிபட்டி மற்றும் நெற்குப்பை சுற்றுவட்டார பகுதியில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு காவலர்களுக்கு நற்சான்று வழங்கி தென் மண்டல ஐ.ஜி கௌரவித்தார்.சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டி மற்றும் உலகம்பட்டி சரக பகுதியிலும், நெற்குப்பை சரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களைப் பற்றித் தகவல் தந்தும் 
சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய உறுதுணையாக இருந்தும் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு காவலர்கள் சிங்கம்புணரியை சேர்ந்த பூபதி மற்றும் ஐயப்பன் ஆகியோர் சிறப்பாக பணியாற்றியதற்காக தென் மண்டல ஐஜி. முருகன் நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.


நற்சான்றிதழ் பெற்ற தனிப்பிரிவு காவலர்களை சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றிய சுற்றுவட்டார பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


-ஃபாரூக்,சிவகங்கை. 


Comments