தீபாவளிக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர் போக சிறப்பு பஸ்!!

     -MMH


தீபாவளிக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர் போக சிறப்பு பஸ் - எங்கிருந்து எங்கே முழு விவரம்.


         சென்னை: தீபாவளிக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்காக 6 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஐ.டி.நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் கடந்த ஆண்டை விட குறைவான அளவே பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.


        தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் சொந்த பந்தங்களுடன் கொண்டாட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நவம்பர் 11ஆம் தேதிமுதல் 13ஆம் தேதிவரையில் சென்னையில் இருந்து 9ஆயிரத்து 510 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 5 ஆயிரத்து 247 பேருந்துகள் என மொத்தம் 14 ஆயிரத்து 757 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.


       தீபாவளி பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வர 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 16026 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னையில் சிறப்புப் பேருந்துகளின் வழித்தடங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


        சென்னை கோயம்பேடு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ,திருச்சி, மதுரை ,திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில் ,கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ,விழுப்புரம் ,பண்ருட்டி ,நெய்வேலி ,கள்ளக்குறிச்சி ,திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் ,மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள்.
செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள்.


       திருத்தணி, காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் மற்றும் செல்லும் பேருந்துகள்.


       ஈசிஆர் வழியாகப் புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.


       திண்டிவனம், விக்ரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்


       பேளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், பண்ரூட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், கடலூர், காட்டுமன்னார்கோயில், புதுச்சேரி, செல்லூர் பேருந்துகள்(திண்டிவனம் வழியாக)
சென்னை கோயம்பேடு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.


       பேருந்துகளை முன்பதிவு செய்ய கேயம்பேடு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் MEPZ பேருந்து நிலையத்தில் 2 மையங்களும், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் 1 மையம் என மொத்தம் 13 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.


       பேருந்துகளை முன்பதிவு செய்யwww.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com, www.busindia.comஉள்ளிட்ட இணையதளங்கள் மூலமாக முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.


      மேலும் பேருந்து இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகார்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக 94450 14450, 94450 14436 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.


Comments