சர்வீஸ் ரோட்டை கடக்க மஞ்சள் கோடு!!
-MMH
சர்வீஸ் ரோட்டை கடக்க மஞ்சள் கோடு!!
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இரண்டு 'யுடேர்ன்' பகுதிகள், அரசு மேல் நிலைப் பள்ளியில் இருந்து விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் ரோடு, பொன்மலை வேலாயுதசுவாமி கோவில் அடிவாரம், பழைய செக்போஸ்ட் பகுதியில் உள்ள 'யுடேர்ன்' பகுதிகளில், பாதசாரிகள் ரோட்டை கடந்து செல்வதற்கு, மஞ்சள் வர்ணம் கோடு இல்லாமல் இருந்தது. இதனால், சர்வீஸ் ரோட்டில் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகிறது.
வாகன வேகத்தை கட்டுப்படுத்தவும், பாதசாரிகள் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே கடந்து செல்ல வேண்டும் என்பதற்காகவும், சர்வீஸ் ரோட்டில் 'யுடேர்ன்' பகுதிகளில்,தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மஞ்சள் வர்ணம் கோடு அமைத்துள்ளனர். இதனால், 'யுடேர்ன்' பகுதியை பாதசாரிகள் சிரமமின்றி கடந்து செல்கின்றனர். மேலும், அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் செல்லும் இடத்திலும், மஞ்சள் கோடு வரையப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முஹம்மது ஹனீப், திருப்பூர்.
Comments