உடலிலுள்ள புழுக்களை துரத்தணுமா..❔ இந்த டீயை குடியுங்கள்!!

    -MMH 


     பொதுவாக நமது உடலில் பல்வேறு வகையான ஒட்டுண்ணி புழுக்கள் வாழுகின்றது. இது உடலினுள் நுழையும் புழுக்கள் உணவு மற்றும் தண்ணீரின் வழியாகத் தான் உடலை அடைகிறது. உடலில் அரிப்புக்களுடன் காய்ச்சல், வீக்கம், வாந்தி, அசாதாரண அல்லது தீவிர தலைவலி, வேகமான இதய துடிப்பு, மங்கலான பார்வை, மூச்சு விடுவதில் சிரமம், ஒரு வாரத்திற்கும் மேலான இருமல் போன்றவற்றை வைத்து உடலினுள் புழுக்கள் இருப்பதை கண்டறிய முடியும்.


உடலில் புழுக்கள் அதிகம் இருந்தால், அதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையிழந்து, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் சரியாக கிடைக்காமல் உடல் பலவீனமாகிவிடும்.


இதனை ஆரம்பத்திலே சரி செய்வது சிறந்தது ஆகும். அதற்கு நமது சமையலறையில் இருக்கும் சக்தி வாய்ந்த பொருளாக இஞ்சி உதவுகின்றது. இதில் டீ போட்டு குடிப்பதனால் உடலில் உள்ள புழுக்களை முற்றிலும் வெளியேற்றலாம். தற்போது இந்த சக்திவாய்ந்த டீயை எப்படி தயாரிக்கலாம் என பார்ப்போம்.தேவையான பொருட்கள்:


பூண்டு – 1
இஞ்சி – 1 சிறிய துண்டு
தயாரிக்கும் முறை


முதலில் பூண்டு மற்றும் இஞ்சியை துருவிக் கொள்ள வேண்டும்.


பின் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, 5 நிமிடம் கழித்து வடிகட்டினால் டீ தயார். இந்த டீயை தினமும் உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் குடித்து வந்தால், விரைவில் உடலில் உள்ள ஒட்டுண்ணிப் புழுக்கள் அழித்து வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகும்.


-ஸ்டார் வெங்கட்.


Comments