நியாய விலை கடையை சூறையாடிய யானைக் கூட்டம்!!- பதற்றத்தில் மக்கள்!!
-MMH
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை தாய்மூடி எஸ்டேட் பகுதியில் நேற்று இரவு நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் அப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடையை யானை கூட்டம் சூறையாடியது. இதைக்கண்ட தேயிலைத் தோட்ட காவலர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் யானைகளை விரட்டி அடித்தனர்.
மேலும் இப்பகுதியில் உள்ள மக்கள் கூறுகையில் "நேற்று மாலை கிட்டத்தட்ட 12 யானைகள் இப்பகுதியில் முகாமிட்டிருந்தது. வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும் விரட்டாமல் அதிகாரிகள் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாக தெரிவித்தனர். இதனால் யானைகள் சர்வசாதாரணமாக குடியிருப்பு பகுதிக்குள் வந்து செல்கின்றன. அதிர்ஷ்டவசமாக நாங்கள் யாரும் யானைகள் கண்முன்னில் அகப்படவில்லை. ஆனால் யானைக்கூட்டம் எந்நேரம் வேண்டுமானாலும் எங்கள் வீடுகளை தாக்கலாம்", என்கிறார்கள் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள்.
வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து மக்களின் பயத்தையும் அச்சத்தையும் போக்க வேண்டியது அவர்களின் கடமையாகும். வனத்துறை அதிகாரிகள் கடமை தவறாமல் செயல்பட்டால் மக்கள் பயமின்றி இப்பகுதியில் வாழலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.
Comments