அவிநாசி அருகே மூன்று வயது குழந்தை சாதனை...!

      -MMH


திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே 3 வயது குழந்தை 9 வினாடிகளில் 22 மொழிகளை சொல்லும் அபாரதிறமை இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.அவிநாசி அடுத்த செய்யூர் அருகே லூர்துபுரம் ஓநாய் பாறை பகுதியைச் சேர்ந்த ரவி பெஸ்ஸில் தம்பதியரின் மூன்று வயது மகள் அன்டோனா இந்தியாவில் உள்ள 22 மொழிகளில் பெயர்களை அதிவேகமாகவும் குறைந்த நேரத்திலும் உச்சரித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.


மேலும் மாநிலத்தின் பெயரை சொன்னால் உடனடியாக அதன் தலை நகரத்தை இந்த சிறுமி கூறுகிறார். குழந்தை அன்டோனாவின் இந்த சாதனையை பாராட்டி பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


-ஸ்டார் வெங்கட்.


Comments