சசிகலாவின் சகோதரர் மரணம்!!

     -MMH


     சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனம் சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 14.11.2020  சனிக்கிழமை காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சசிகலாவின் மூத்த அண்ணனும் டிடிவி தினகரனின் மாமனாருமான சுந்தரவதனம் உடல்நலக் குறைவுகாரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம்(14.11.2020) காலமானார். அவருக்கு வயது 78. அவருடைய மனைவி பெயர் சந்தானலட்சுமி அவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்தார், இவருக்கு பிரபாவதி மற்றும் அனுராதா ஆகிய 2 மகள்களும் டாக்டர் வெங்கடேஷ் என்ற ஒரு மகனும் உள்ளார்.  அனுராதா அமமுக பொதுச்செயலாளர் தினகரனின் மனைவி ஆவார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி இறுதியில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், சசிகலாவின் மூத்த அண்ணனும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மாமனாருமான சுந்தரவதனத்தின் இறப்பு அவர்களே குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுந்தரவதனம்  அவருடைய இறுதிச் சடங்கு தஞ்சாவூரில் மேல்வஸ்தா சாவடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. சசிகலாவின் சகோதரர் திவாகரன், அமமுக பொதுச் செயலாளர் தினகரன் மற்றும் கட்சியினர் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர். டாக்டர் வெங்கடேஷ் சுந்தரவதனத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


நாளைய வரலாறு செய்திக்காக,


-ராஜசேகரன்,தஞ்சாவூர்.


Comments