முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள் திடீர் கைது!!

     -MMH


முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின்  ஆதரவாளர்கள் திடீர் கைது!!


     கும்பகோணத்தில் முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே சாலை மறியலிலும் பஸ் கண்ணாடிகளை உடைத்தும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர்  அதிமுக தலைமைக்கும் துரைக்கண்ணுவின் மகனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மற்றும் கட்சியின் கணக்கு வழக்குகளை விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் முன்னாள் அமைச்சருடைய பின்னணியில் இருந்த 5 பேரை காவல்துறை நேற்று இரவு கைது செய்துள்ளது. அதனால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. 


நாளைய வரலாறு செய்திக்காக,


-ராஜசேகரன், தஞ்சாவூர்.


Comments