பொள்ளாச்சி சாமி கோவிலுக்கு அருகில் சாமி கடை!!

     -MMH


       பொள்ளாச்சி கிழக்கு உடுமலை சாலையில் பாலிடெக்னிக் அருகில் அமைந்துள்ள வாழை பழ கடை.


       கடையின் அருகில் மிக பழமையான கருபுராயன் கோவில் உள்ளது அருகில் பெருமாள்சாமி வாழை பழகடையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


       இவரது சிறப்பு ரஸ்தாளி வாழை ஆகும் அதன் சிறப்புகளை பற்றி தெரியலாம். வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளன. பேயன், ரஸ்தாளி, மலை, பச்சை, நாட்டு, நவரை, சர்க்கரை, செவ்வாழை, பூவன், கற்பூரம், மொந்தன், நேந்திரன், அடுக்கு, வெள்ளை என வாழைப்பழத்தின் ரகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
எல்லா வாழைப்பழங்களிலும் வைட்டமின் சத்துகளும், சுண்ணாம்பு மற்றும் உயிர்சத்துக்கள் உள்ளன.


       இவை மனித உடல் ஆரோக்கியத்துக்கும், வளர்ச்சிக்கும், உதவுகிறது. பூவன் வாழை நல்ல ஜீரண சக்தியை தரக்கூடியது. ரத்த விருத்தி செய்யும். தசை ஆரோக்கியத்துக்கு நல்லது. மலச்சிக்கலுக்கும் நல்லது. ஆனாலும், இப்பழத்தை ஆஸ்துமாக்காரர்கள், அதிக கோழை கட்டிக் கொண்டவர்கள், குளிர்ச்சியான தேகம் கொண்டவர்கள், நீரிழிவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.


       ரஸ்தாளிபழம் சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பியது போன்ற உணர்வை ஏற்படுத்தும். உணவு உண்டவுடன், இதை உடனடியாக உண்ணாமல் இருப்பது நல்லது.
இது ஊட்டச்சத்து நிரம்பியதாக இருந்தாலும், மந்தத்தை தரும் இயல்புடையது. வளரும் குழந்தைகளுக்கு அரை ரஸ்தாளியை தேனில் கலந்து கொடுத்துவந்தால், குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு நல்லது.


      பச்சை வாழைப்பழம் அதிக குளிர்ச்சி உடையது. குறைந்த அளவே உண்ண வேண்டும். உடல் சூட்டை தணிக்க உதவும். காசம், ஆஸ்துமா, வாத நோய்காரர்கள் இப்பழத்தை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
மலச்சிக்கலை போக்கும் குணம் உடையது.
மலை வாழைப்பழத்தை, வாத நோய்காரர்கள் தவிர, மற்றவர்கள் தாராளமாக சாப்பிடலாம்.


       தோலுக்கு நல்லது. இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர, உடல் மினுமினுப்பு கூடும். ரத்தவிருத்தி, ஜீரணசக்தி, மலச்சிக்கலுக்கு நல்லது. பேயன் வாழைப்பழம் குழந்தைகளுக்கு ஏற்படும் கணைச் சூட்டை தணிக்கும் இயல்புடையது. வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று சாப்பிடலாம்.


       கற்பூர வாழைப்பழம் அளவில் சிறியதாக இருக்கும். மூளை வளர்ச்சிக்கு நல்லது. தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, புண்கள் விரைவில் ஆறி விடும். தலைபாரம் நீங்கும், இளைஞர்களுக்கு சுறுசுறுப்பை தரும்.


       நேந்திரன் வாழைப்பழம் மிதமான வாசனையும், ருசியும், சுவையும் கொண்டது. இது மூளையின் செல்களுக்கு வலுவூட்டி, நல்ல ஞாபக சக்தியை ஏற்படுத்தும் திறன் கொண்டது.
நவரை வாழைப்பழம் குளிர்ச்சியானது. இதை பொதுவாக உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல எனக் குறிப்பிடுவர். இதே போலத்தான் அடுக்கு வாழைப்பழம், இதை நோயுள்ளவர்கள் சாப்பிடக் கூடாது.


       மொந்தன் வாழைப்பழம் வாந்தியை நிறுத்தும். காமாலையை குணமாக்கும் இயல்புடையது. கரு வாழைப்பழம் உடலுக்கு நல்லது. நல்ல ஊட்டச்சத்து கொண்டது. குழந்தைகளின் வளர்ச்சியை துரிதப்படுத்தும் இயல்புடையது. செவ்வாழைப்பழம், இது வாழைப்பழங்களில் அதிகளவு சத்துக்கள் கொண்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.



நாளைய வரலாறு செய்திக்காக, 


-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments