பிரபல ரவுடியின் மகன் வெட்டிக் கொலை!!

     -MMH


     சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை. அம்பேத்கார் நகர், 3வது தெருவில் மாநகராட்சி பூங்கா அருகில் பாலு (வயது 30) என்பவரை, மூன்று நபர்கள் கொண்ட மர்ம கும்பல் பாலுவை சராமாரியாக தலையில் வெட்டி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாலு உயிரிழந்தார்.


இவருக்கு திருமணமாகி 2 வயது பெண் குழந்தை உள்ளது. பாலு ஆட்டோ வாடகைக்கு விடும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. பாலுவின் தந்தை விஜயன். வட சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் என கூறப்படுகிறது. கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு விஜயன் உயிரிழந்துள்ளார்.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பாலுவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஆர்கேநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பிரபல ரவுடியின் மகன் என்பதால் அப்பகுதியில் 50க்கும் மேல் காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


-கார்த்திகேயன், சென்னை. 


Comments