சிங்கம்புணரி உதவும் இதயங்கள் அறக்கட்டளை சார்பாக 100 குடும்பங்களுக்கு இலவச மரக்கன்று!!

  -MMH

சிங்கம்புணரி: 'சிங்கம்புணரி உதவும் இதயங்கள் அறக்கட்டளை' சார்பாக பகவாண்டிபட்டியில் 100 குடும்பங்களுக்கு இலவச மரக்கன்று வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி உதவும் இதயங்கள் அறக்கட்டளையின் சார்பாக, பகவாண்டிபட்டியில் இயற்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 100 குடும்பங்களுக்கு பல வகை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி தலைமையிலும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிங்காரம், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் முன்னிலையிலும் நடைபெற்ற விழாவில், சிங்கம்புணரி உதவும் இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் ரோகினி, செயலாளர் மருத்துவர் நந்தினி, துணை செயலாளர் கண்ணன், பொறுப்பாளர்  சரவணன் மற்றும் நிதிஷ் குமார்  ஆகியோர் கலந்துகொண்டு பல வகை மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினர். முன்னதாக ஊராட்சி செயலாளர் நாகேந்திரன் வரவேற்றார். சமூக ஆர்வலர் சுதாகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments