பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியின் 136-வது துவக்க தினத்தை முன்னிட்டு மாபெரும் ஊா்வலம் நடைபெற்றது!!

-MMH

காங்கிரஸ் கட்சியின் 136-வது துவக்க தினத்தை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் பொள்ளாச்சியில்   மாவட்ட தலைவர் M.P.சக்திவேல் தலைமையில் கட்சி கொடியேந்தி மாபெரும் ஊா்வலம் நடைபெற்றது. 

பொள்ளாச்சி கோவை சாலையில் தொடங்கி நியூஸ்கீம் ரோடு காந்தி சிலை வரை தொண்டர்கள் ஊர்வலம் நடந்தது.மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்தும்,காங்கிரஸ் கொள்கைகளை பரப்பியும் கோஷங்கள் இடப்பட்டது.இறுதியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிலையில் மாவட்ட பொதுச்செயலாளர் அன்சர் வரவேற்றார் முன்னிலையாக மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்  SPK.கணேசன், ஜோதிமணி, Dr.புவனேஸ்வரி, மதுக்கரை அஜிஸ், மாவட்ட துணை தலைவர்கள் R.கோபாலகிருஷ்ணன்,

G.மதுசூதனன்,மாவட்ட பொருளார் ஸ்ரீதர்,நகர தலைவர் அருள்,கராத்தே பஞ்சலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியினை முன்னாள் மாவட்டத் தலைவர் D. கோவிந்தராஜ் துவக்கி வைத்தார். மேலும் விழாவில் மாநில வழக்கறிஞர் பிரிவு பொது செயலாளர்  வக்கீல் ரவி,N.K.பகவதி,

மாநில ஊடகபிரிவு பொது செயலாளர் காளீஸ்வரன் மாவட்ட ஊடக பிரிவு  தலைவர் பிரபு ராம்,கலைப்பிரிவு முபாரக், சிறுபான்மை பிரிவு அன்வர் தாதாகான்,சங்கர்,SC துறை கோபால்சாமி, மாவட்ட நிர்வாகிகள்  சிற்பி ஜெகதீஸ்வரன்,

ராமசாமி,சுப்பிரமணியம்,ஹக்கீம் வட்டாரத் தலைவர்கள் சாந்தலிங்கம், மதுக்கரை பாலு, தமிழ்ச்செல்வன், மலர் பாபு, மோகன்ராஜ், தென்னரசு,தேவக்குமார்,மணி,முருகன்,மதுவை பாலு,காளிமுத்து,மற்றும் கட்சி நிர்வாகிகள்  திரளாக கலந்து கொண்டனர்.

-M.சுரேஷ்குமார்,V.ஹரிகிருஷ்ணன்.

Comments