கனிமொழி பிரச்சார கூட்டத்தில் சுமார் ரூ.1.5 லட்சம் திருட்டு!! - வரவேற்க்க வந்த 3 பேர் கைது!!
கோவை சுந்தராபுரத்தில் நடந்த திமுக பிரச்சார கூட்டத்தில் சுமார் ரூ.1.5 லட்சம் வரை திடிய மூன்று பேரை போத்தனூர் குற்றப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
'விடியலை நோக்கிய ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கோவையில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை பொள்ளாச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் இரவு சுந்தராபுரம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது கனிமொழியை வரவேற்க வந்த அதே பகுதியில் கேக் கடை நடத்தி வரும் சிவமணி (41) என்பவர் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை மர்ம நபர் திருடிச்சென்றுள்ளார். இதே போல் வெள்ளலூரை சேர்ந்த முத்தலி என்பவர் வைத்திருந்த ரூ.22 ஆயிரம் பணமும் மாயமானது. இதே போல் மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (44) என்பவர் வைத்திருந்த ரூ.1.15 லட்சம் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதே போல் கூட்டத்தில் பலரிடம் பணத்தை திருடிச் சென்றதாக போத்தனூர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து திமுக எம் பி கனிமொழியை வரவேற்க்க வந்த கூட்டத்தில் மூன்று பேர் பணத்தை திருடியது தெரியவந்தது. பணத்தை பறிகொடுத்த திமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாச்சம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (30), அழகேசன் (27), இடையர்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (29). ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணையில் பணத்தை திருடியது உறுதியானது. இதையடுத்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திமுகவினரின் பணத்தை திமுகவினரே திருடியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-சீனி, போத்தனூர்.
Comments