எம்.ஜி. ஆரின் 33 ஆம் ஆண்டு நினைவு தினம்! கோவை அ.தி.மு.க வினர் அஞ்சலி!

 

-MMH 

கோவையில் 1000க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் திரண்டு, அக்கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையிலிருந்து அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை சந்திப்பு வரை அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின் திருவுருவப் படத்தை கை வண்டியில் ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர் அவிநாசி சாலையில் உள்ள மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோரது திருஉருவ சிலைகளுக்கு மாலை அணிவித்தும் மலர் தூவி மரியாதை செலுத்திய அதிமுக தொண்டர்கள் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

-சீனி போத்தனூர்.

Comments