மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் தலைதூக்கும் கொரோனா..! செவிலியர்கள் 3 பேருக்குத் தொற்று!

-MMH

வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பீதி! கடந்த 3 நாட்களில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது பயிற்சி செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தச் செய்தி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனையில் தொடரும் கொரோனா பரவலால் காரணமாக நோயாளிகள், மருத்துவ கல்லூரி மாணவர்கள், பணியாற்றும் மருத்துவர்கள், அதிகாரிகள் என அனைவரும் பீதி அடைந்துள்ளனர். மதுரை அரசு மருத்துவமனை வளாகம்தான் கொரோனா கூடாரம்!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்திற்குள் செயல்பட்டு வரும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்றுவருகின்றனர். இந்நிலையில் 3 மாணவிகளுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இப்போது செவிலியர்கள் மத்தியிலும் பரவும் கொரோனா பரிசோதனையின் முடிவில் 3 மாணவிகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேருக்கும் அரசு ராஜாஜி கொரோனா சிறப்புச் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

கொரோனா வந்தால் குறிப்பிட்ட வளாகத்தை அடைப்பது அந்த காலம்! மருத்துவக் கல்லூரியில் கடந்த வாரம் பரவத் தொடங்கிய இந்த கொரோனா காரணமாக மருத்துவம் படிக்கும் 5 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் கண்டறியப்பட்டபோதும் மருத்துவக் கல்லூரி வளாகத்தைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடைக்க வலியுறுத்தவில்லை.

என்னதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..? இந்த சூழலில் பயிற்சி செவிலியர்கள் பணிபுரிந்த வார்டு ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளன. மதுரை அரசு மருத்துவமனை சார்ந்த நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் எதுமாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது எனக் கேள்வி எழுந்துள்ளது.

இது புதிய கொரோனாவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது! பரிணாம வளர்ச்சியடைந்த கொரோனா பரவல் இப்போது இங்கிலாந்திலிருந்து பரவத் தொடங்கியுள்ளது என உலகமே அச்சம் கொண்டுள்ள சூழலில், மதுரை மாநகராட்சியின் இந்த அலட்சிய நடவடிக்கை மக்களை கடும் அச்சத்தில் வைத்துள்ளது. இதுபோன்ற ஆபத்தான சூழலில் அதிகாரிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பாரூக்.

Comments