மேகமலையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து! 4 பேர் காயம்..!

 

-MMH

தேனி மாவட்டம் ஹைவேவிஸ்- மேகமலை 4 ஆவது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வாகனம் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

மதுரை தெப்பக்குளம் காமராஜா் நகா் பகுதியிலிருந்து 3 குடும்பங்களைச் சோ்ந்த உறவினா்கள் 15 போ் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் மேகமலைக்கு சுற்றுலா சென்றனா். முக்கிய இடங்களை சுற்றுப்பாா்த்துவிட்டு அவா்கள் மீண்டும் மாலையில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது 4 ஆவது கொண்டை ஊசி வளைவில் வாகனம் எதிா்பாராதவிதமாக சாலையோர பாதுகாப்பு தடுப்பு வேலி மீது மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில், வாகன ஓட்டுநரான மதுரையைச் சோ்ந்த திருநாவுக்கரசு மற்றும் தா்ஷினி (11), அருள்மணி (37), காளியம்மாள் (75) ஆகிய 4 போ் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்குச் சென்ற சின்னமனூா் காவல் ஆய்வாளா் சண்முகலட்சுமி மற்றும் போலீஸாா், வாகனத்திலிருந்த 15 பேரையும் மீட்டு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பெரும் விபத்து தவிா்ப்பு: வளைவில் பாதுகாப்புத் தடுப்பு கம்பி வேலி போடப்பட்டு இருந்ததால், சுமாா் 300 அடி பள்ளத்தில் வாகனம் கவிழவில்லை என்றும், இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக் தேனி.

Comments