கோவை அருகே பரபரப்பு!! விளையாடிக் கொண்டிருந்த 4 குழைந்தைகள் திடீர் மாயம்..!

-MMH

பொள்ளாச்சியில் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் 2 சிறுமிகள்  மாயம், காணாமல் போன நான்கு மணிநேரத்தில் குழந்தைகள் மீட்பு. கடத்தப்பட்டார்களா என்ற கோணத்தில் குழந்தைகளிடம் போலீசார் விசாரணை.

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல் ஐ சி காலனியில் வசித்து வருபவர் மணிகண்டன், சாரதா தம்பதியரின்  மகள் ஜீவனி ஸ்ரீ ஆறாம் வகுப்பும் மகன் ஜீவனேஸ்வரன்  மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார் இவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் ரபீகஅகமது, சபிதா பீவி தம்பதியரின் மகள் ஹசீனாபானு  எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் மேலும் அவர் வீட்டருகே வசித்து வரும் பிரகாஷ் குமார் என்பவரது மகன் 

தானுமலையான் நான்காம் வகுப்பு படித்து வருகிறான் இந்நிலையில் இவர்கள் நான்கு பேரும் நேற்று மாலை வீட்டருகே ஒன்றாகவிளையாடிக் கொண்டிருந்தனர் இரவு 7 மணியளவில் பெற்றோர்கள் வந்து பார்த்தபோது விளையாடிக்கொண்டிருந்த 4 பேரையும்  காணவில்லை அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும்  குழந்தைகள் கிடைக்காததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

விளையாடிக்கொண்டிருந்த  குழந்தைகள் மாயமான சம்பவத்தை அறிந்த அப்பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் பெற்றோர்கள்   மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குழந்தைகளை தீவிரமாக தேடி வந்தனர். 

குழந்தைகளை யாராவது கடத்திச் சென்று விட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இதனிடையே தற்போது அந்த குழந்தைகள் மீட்கப்பட்டு கோவை உக்கடம் காவல்நிலையத்தில் பத்திரமாக உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அந்த குழந்தைகளிடம் விசாரணை நடத்திய பின்னரே மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த நான்கு குழந்தைகள் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-சீனி போத்தனூர்.     

Comments