உனக்கு 51 எனக்கு 26! கொலையில் முடிந்த பேராசை!

-MMH

கன்னியாகுமரி அருகே வயதான பெண்ணைத் திருமணம் செய்த வாலிபர், சொத்துக்காக அவரை கொலை செய்த கொடூரம். ஆண் துணைக்காக, வாலிபரைத் திருமணம் செய்துகொண்டு அவருக்கு தாம்பத்திய சந்தோசத்தை கொடுக்காமல் இருந்ததால் பெண் கொலை செய்யப்பட்டுளார். மேலும், வாலிபரின் நண்பர்கள் அவமானப்படுத்திப் பேசியதால் இக்கொலை நடந்திருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை அடுத்த காரக்கோணத்தைச் சேர்ந்தவர் சகா (51). இந்தப் பெண்ணுக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ள நிலையில் வயதான தாயுடன் வசித்து வந்துள்ளார். வருமானத்திற்காக சொந்தமாக பியூட்டி பார்லரையும் நடத்தி வந்துள்ளார். திருமணம் செய்துகொண்டால் தாயை பராமரிக்க முடியாமல் போய் விடுமோ என்ற எண்ணத்தில், வீட்டோடு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வதில் திட்டவட்டமாக இருந்து வந்துள்ளார் சகா. ஆனால், நினைத்த வரன் கிடைக்காததால் 51 வயதுவரை திருமணம் நடக்கவில்லை.

தனியார் மருத்துமனையில் ரிஷப்சனிஸ்ட் வேலை பார்த்து வந்த அருண் (26) என்பவருடன் சகாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. 51 வயதானாலும் மேக்கப் யுக்திகள் மூலம் தன்னை பளிச்சென்று காட்டிக்கொண்டதால் வயது விவகாரம் தெரியாமல் சகாவை காதலிக்க தொடங்கியுள்ளார் அருண்.

பின்னர் திருமண ஏற்பாடுகளுக்காக சகாவை குறித்து அருண் தனது வீட்டில் தெரியப்படுத்தியுள்ளார். அப்போது, தாய் வயதான சகாவை திருமணம் செய்துகொள்வதற்கு அருணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், சகாவை திருமணம் செய்துகொண்டால் 10 ஏக்கர் நிலம் கிடைப்பது மட்டுமில்லாமல், தினந்தோறும் பியூட்டி பார்லர் மூலம் வருமானம் வரும் என்ற ஆசையில் கிறிஸ்துவ முறைப்படி சகாவை திருமணம் செய்துள்ளார் அருண்.

திருமணம் செய்துகொண்ட கையோடு வீட்டோடு மாப்பிள்ளையான அருணை கவனிக்காமல் மோசமான உடல்நிலையால் அவதிப்படும் தாயை பார்த்துக்கொள்வதில் அக்கறை காட்டி வந்துள்ளார் சகா.திருமணத்திற்கு பிறகு தாம்பத்திய உறவும், காதலும் சகாவிடம் இல்லை என்ற ஏக்கத்தில் இருந்த அருண், மன விரக்தி அடைந்தனர். இருப்பினும், சொத்துதான் உள்ளதே அதற்காக அனுசரித்து செல்லலாம் என இருந்துள்ளார்.

இந்நிலையில், அருணை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை சகா முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்பட பதிவை அருணின் நெருங்கிய நண்பர்களுக்கும் டேக் செய்துள்ளார். இதனால், அருணின் நண்பர்கள் அவரை கலாய்த்தது மட்டுமில்லாமல், ஆண்டி வெறியன் என்பதை போல பாட்டி வெறியன் என்று கூறியுள்ளனர்.

இதனால் வெறுப்பான அருண் ஒருநாள் சகாவை கொலை செய்ய முயற்சித்துள்ளார். அதில் இருந்து தப்பிய சகா நடந்தவற்றை அக்கம் பக்கத்தில் குடியிருக்கும் ஒரு பெண்ணிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து, சம்பவத்தன்று சகாவை அடித்து உதைத்த அருண் மின்சார ஒயரை உடலில் பாய்ச்சி சகாவை துடிதுடிக்க கொலை செய்துள்ளார். ஆனால், போலீசில் தனது மனைவி மின்சார அடுப்பில் ஏற்பட்ட மின்கசிவினால் உயிரிழந்ததாக நாடகமாடியுள்ளார்.

பக்கத்து வீட்டுப் பெண் கொடுத்த சாட்சியின் மூலம் அருணை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் நடந்தவற்றை கூறி கைதாகியுள்ளார். 'வயதானாலும் ஆண் துணை தேடும் வசதி படைத்த பெண்கள் திருமணம் அல்லது மறுமண ஏற்பாட்டில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்' என போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பாரூக்.

Comments