7 அடி நீள சாரைப் பாம்புடன் நிற்கும் சிறப்பு எஸ்ஐ புகைப்படம்! - சமூகவலைதளங்களில் வைரல்!

     -MMH

    டிச - 10-2020; 

 சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா உலகம்பட்டி காவல் நிலையத்திற்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை, சிறப்பு எஸ்ஐ ஒருவர் தைரியமாகப் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

உலகம்பட்டி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலர் பிரபாகரன் பணியிலிருந்த போது 7 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று காவல் நிலையத்திற்குள் நுழைந்துள்ளது. அவர் அதிர்ச்சியடைந்தாலும்,பாம்பு பிடிப்பதில் வல்லவராக அறியப்பட்டிருந்த சிறப்பு எஸ்ஐ சக்திவேலுக்கு, அவர் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சிறப்பு எஸ்.ஐ சக்திவேல் உடனடியாக காவல் நிலையத்திற்கு வந்தார். அங்கு பதுங்கியிருந்த சாரை பாம்பை லாவகமாக பிடித்துக் கொண்டு வெளியே வந்தார். பின்னர் அதனை உலகம்பட்டி மலைப்பகுதிக்குக் கொண்டு சென்று வனத்தில் விட்டுவிட்டனர்.

சிறப்பு எஸ்ஐ சக்திவேல், 7 அடி நீளமுள்ள பாம்புடன் நிற்கும் புகைப்படம், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

- பாருக், சிவகங்கை.

Comments